சர்வதேச தகவல் தொடர்பு தினம்: கொழும்பில் சிறப்பு நிகழ்வு!

சர்வதேச தகவல் மற்றும் தொடர்பு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் சிறப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 07, ஸ்ரீலங்கா ஃபவுண்டேஷனில் பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதுடன், வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் வக்குஷால அரியரத்னவும் பங்கேற்கவுள்ளார்.

நிகழ்வின் ஊடகப் பதிவுகளுக்காக பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அனுப்பி வைத்து பங்கேற்பை உறுதி செய்யுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகப் பிரதிநிதிகளின் பங்கேற்பு தொடர்பான மேலதிக தகவல்கள் சத்துரி கஹதபிட்டியால் 0704 333235 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *