கட்டைபறிச்சானில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறலும், நினைவஞ்சலி நிகழ்வும்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு சம்பூர் -ஆலங்குளம் மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டம்  மூதூர் கிழக்கு  – கட்டைபறிச்சான் பகுதியில் நேற்று(14) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *