ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளில் இன்று விடுமுறை

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மத்திய மாகாணத்திலுள்ள ஏனைய கல்வி வலயங்களில் பாடசாலைகளை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை அந்ததந்த வலயங்களின் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *