இந்தியா–இலங்கை போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பு குறித்து 5ஆவது பேச்சுவார்த்தை!

இந்தியா மற்றும் இலங்கையின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5ஆவது தலைமை இயக்குநர் மட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றது.

இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) துணைத் தலைமை இயக்குநர் ஆர். சுதாகர் தலைமையிலான குழுவும், இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) உதவி பொலிஸ் மா அதிபர் கே.டி.ஜி.எல். அசோக தர்மசேன தலைமையிலான குழுவும் இதில் பங்கேற்றன.

இதன்போது, குறிப்பாக கடல் வழியாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலின் புதிய போக்குகள், கடத்தல் வழித்தடங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர்.

மேலும், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான தகவல் பரிமாற்றம், விசாரணை மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *