மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாக தீபம் திலீபனின்; 39 வது நினைவேந்தல்

மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (26) காந்தி பூங்காவில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபனின் 39 வது நினைவேந்தல் இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் காந்தி பூங்காவில் இடம்பெற்றது

இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் தமிழரசு கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா, செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முரளிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *