வாதுவை விபத்தில் இளைஞர் பலி; மாணவி படுகாயம்

களுத்துறை – வாதுவை பொதுபிட்டிய காலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறையிலிருந்து வாதுவை நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் கைப்பிடிகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று உரசியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஒரு மோட்டார் சைக்கிள் வீதியில் சரிந்து விழுந்துள்ளதுடன், மற்றைய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்புறத்திற்குச் சென்று எதிரே வந்த காருடன் நேர் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞரும் பாடசாலை மாணவியும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் காரின் சாரதி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *