ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வின் (UNGA81) உயர் மட்ட வாரத்தின் ஒரு பகுதியாக, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இரு அமைச்சர்களும் தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் பதற்றத்தைத் தணிப்பதற்கும், சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கும் இலங்கை தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிராந்தியத்தில் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கும் பதற்றங்களைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகளுக்கு இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமைச்சர் விஜித ஹேரத், கூடிய விரைவில் பிராந்திய ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *