இலங்கையின் மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்துக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (3) முற்பகல் 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதோடு, கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

