மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

வடக்கு – கிழக்கில் மே 12 முதல் மே 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்படும் நிலையில் இன்று(16) மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நினைவேந்தல் நிகழ்வும் மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக நினைவுகூறப்பட்டது.

இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு வீதியால் பயணித்த பொது மக்களுக்கு கஞ்சி பறிமாறப்பட்டது. அவர்களும் மகிழ்ச்சியாக அதனை வாங்கிப்பருகினர்.

இலங்கை அரசின் கொடூரமும், கஞ்சிகூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச் செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற செயற்பாட்டினையும் எமது எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக இன அழிப்பு வாரம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு போன்ற பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் வருடாவருடம் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *