இன்றைய ராசிபலன்!

 

மேஷம்: தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை. கடன் தொல்லைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். இடமாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது.

 

ரிஷபம்: குடும்பத்தில் அமைதியைப் பேணுவது அவசியம். தம்பதியிடையே மனக்கசப்புகள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுங்கள். பயணங்களில் கவனம் தேவை.

 

மிதுனம்: தேவையற்ற கவலைகள் ஏற்படலாம். பயணங்கள் மற்றும் கடன் விவகாரங்களில் கவனம் தேவை. வீண் அலைச்சலால் உடல்சோர்வு ஏற்படலாம்.

 

கடகம்: பணச்செலவுகள் அதிகரிக்கலாம். காரியங்களில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிறருக்காக உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்க்கவும். நண்பர்களின் உதவிகள் தாமதமாகலாம்.

 

சிம்மம்: தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை.

 

கன்னி: குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தம்பதியிடையே சுமுக உறவைப் பேணுவது அவசியம். பிள்ளைகளின் நடவடிக்கைகளால் கவலை ஏற்படலாம்.

 

துலாம்: பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகி, காரியங்களில் வெற்றி கிடைக்கும். பிறரின் உதவியால் நன்மைகள் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களாலும் லாபம் கிடைக்கலாம்.

 

விருச்சிகம்: தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.

 

தனுசு: தொழில் போட்டிகள் குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

 

மகரம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வாகனங்கள், சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

 

கும்பம்: மனக்கவலைகள் குறையும். பணவரவு கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வீண்பழிகள் நீங்கி, பிரச்சினைகள் சீராகும்.

 

மீனம்: தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும் பணவரவு தடைப்படாது. கூட்டாளிகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *