நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளி வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அல்ஹாஜ் ஏ.எல்.பாயிஸால் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குகளால் வளப்படுத்தியவர்களுக்கு வாத்சல்ய நன்றி கூறும் மகிழ்ச்சிப் பெருவிழாவும், துஆப் பிரார்த்தனையும் நேற்று(15) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சூரா சபைச் செயலாளர் யூ. எல். வாஹித், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ. சி. சமால்தீன், பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கௌரவ உறுப்பினர்களான ஐ. எல். அஸ்வர் சாலிஹ், ஏ. எஸ். எம். உவைஸ், ஏ. சி. நியாஸ், ஏ. கே. அமீர், பட்டியல் வேட்பாளர்கள், கட்சியின் கிளைக்குழுத் தலைவர்கள், செயலாளர்கள், உலமாக்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், கட்சியின் போராளிகள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


