அட்டாளைச்சேனையில் ட்ரைபிட் பிட்னஸ் அகடமியின் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுகம்!

ட்ரைபிட் பிட்னஸ் அகடமியின் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு கடந்த 13ஆம் திகதி அட்டாளைச்சேனை ஸாறா வீச் ஹவுஸில் நடைபெற்றது.

அகடமியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆர். நெளஸாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதுடன், ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதே அகடமியின் பிரதான நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *