261 ஓட்டங்களுடன் சாதனைப் பயணம்! ரி20 தொடரில் ஷாய் ஹோப் புதிய மைல்கல்!

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அந்த போட்டி 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி தலைவர் ஷாய் ஹோப் துடுப்பாட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி 4 இன்னிங்ஸ்களில் 261 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்த ஷாய் ஹோப், தொடர் நாயகன் விருதை வென்றார்.

ராஞ்சியில் நடைபெற்ற 2வது ரி20 போட்டியிலும், ஐதராபாத்தில் நடைபெற்ற 4வது போட்டியிலும் அவர் சதமடித்து அசத்தினார்.

குறிப்பாக, 4வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்த அவரது ஆட்டம்மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது.

இதன் மூலம் இருதரப்பு ரி20 சர்வதேசத் தொடர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி தலைவர் பட்டியலில் ஷாய் ஹோப் 261 ஓட்டங்களுடன் 2-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 242 ஓட்டங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

முதலிடத்திலுள்ள பாபர் அசாமின் சாதனையை முறியடிக்க, ஷாய் ஹோப்க்கு இன்னும் 24 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்த தொடர் சமநிலையில் முடிந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *