திருக்கோவிலில் வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு!

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (20) திருக்கோவில் கல்வி வலயத்தில் நடைபெற்றது.

 

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட வீதிப் பயன்பாட்டாளர்களிடையே வீதி விபத்துக்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இதன் ஆரம்ப நிகழ்வாக, விநாயகபுரம் கோரைக்களப்பு சக்தி வித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.

 

தொடர்ந்து, காஞ்சிரன்குடா கால்நடைப் பயிற்சி நிலையத்தில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

 

இலங்கைப் பொலிஸாரால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு உரையில், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுதல், பாதசாரிக் கடவைகளைப் பயன்படுத்துதல், தலைக்கவசம் அணிதல் மற்றும் வாகனம் செலுத்தும்போதும் வீதியில் நடக்கும்போதும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

 

மேலும், பயிற்சி பெற்ற விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களால் வீதி விபத்துக்கள் தொடர்பான மாதிரி செயல்விளக்கங்கள் நிகழ்த்தப்பட்டன. இதன்மூலம் விபத்துக்களின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும், அவற்றைத் தவிர்ப்பதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு நடைமுறை ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவசர மருத்துவ உதவிக்கு 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்புகொள்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ITN, வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் எஃப்.எம்., லக்ஹண்ட வானொலி, கல்வி அமைச்சு மற்றும் இலங்கைப் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு Fairfirst Insurance நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *