இன்றைய நாளுக்கான ராசிபலன்!

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். செலவுகளில் கவனம் தேவை.

 

ரிஷபம்: நீண்ட நாட்களாகத் தாமதமான காரியங்கள் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை நிதானமாக எடுப்பது நல்லது.

 

மிதுனம்: எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். உதவிகள் கிடைத்தாலும் புதிய நட்புகள் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம். பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.

 

கடகம்: மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பண நெருக்கடிகள் குறையலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும். உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள்.

 

சிம்மம்: குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை அவசியம்.

 

கன்னி: தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படலாம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தர்கள் பொறுமையுடன் செயல்படுவது நன்மை தரும்.

 

துலாம்: குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

 

விருச்சிகம்: சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மனக்கவலைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

தனுசு: மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். பணிகள் விரைவாக முடிவடையும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

 

மகரம்: முயற்சிகளுக்குப் பின்னர் காரியங்கள் கைகூடும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. உடல்நலத்தைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம்.

 

கும்பம்: தொழில், வியாபாரத்தில் நிதானமாகச் செயல்படுவது அவசியம். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களுடன் இணக்கமாகப் பழகுவது நன்மை தரும்.

 

மீனம்: உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் ஏற்படலாம். பணிகளை கவனமாகச் செய்வது அவசியம். குடும்பப் பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை வலுப்பெறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *