இன்றும் நாடு முழுவதும் ஒரு மணி நேர மின்வெட்டு!

மின்சாரத் தேவையை முகாமை செய்வதற்காக நாட்டின் 4 வலயங்களில் இன்றைய தினமும் (21) மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு வலயத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு தனியார் நிறுவனம் (National System Operator Private Limited) முன்மொழிந்த மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 19 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

இதேவேளை, ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், சில பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர் அதுல தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *