திருகோணமலையில் தந்தையைக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை!

திருகோணமலையில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த 35 வயதுடைய மகனான கைலாசப்பிள்ளை வினோதரன் என்பவருக்கு இன்று வியாழக்கிழமை (22) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2022 ஏப்பிரல் 17 ந் திகதி பாலத்தடிச்சேனை, தோப்பூர்  பிரதேசத்தில் மது போதையில் இருந்த அவரது கை.வினோதரன்   தனது தந்தையான  59 வயதுடைய முருகுப்பிள்ளை கைலாசப்பிள்ளை  என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து பொலிசார் இவருக்கு எதிராக  மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து விசாரணையின் பின்னர் 2024 ம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. இதில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான சிகான் முஸ்தாபா, செசான் மஹபூ ஆகியோர் வாதாடி வந்தனர்.

இதனையடுத்து குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் இனங் காணப்பட்டதையடுத்து வழக்கு தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை (22) குறித்த வழக்கில் தண்டனை கோவைச் சட்டத்தின் 296 ம் பிரிவின் கீழ் எதிராளியான கைலாசப்பிள்ளை வினோதரனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா  மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *