நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ரி20 போட்டி இன்று வெலிங்டனில் நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இப்போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்கிறது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் நியூசிலாந்து அணியும் களமிறங்குவதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

