மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பும் புரிந்துணர்வும் மேலோங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: சாதுரியமான பேச்சால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்காலத் திட்டங்கள் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
மிதுனம்: தன்னம்பிக்கையும் மனத்துணிவும் அதிகரிக்கும். கவலைகள் குறைந்து காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
கடகம்: விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். சில காரியங்களில் தாமதமும் உடல் சோர்வும் ஏற்படலாம். பிறருடன் பழகும்போது கவனமாகச் செயல்படுவது நல்லது.
சிம்மம்: தொழில், வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். வாடிக்கையாளர்களுடன் இணக்கமாகப் பேசுவது நன்மை தரும். உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.
கன்னி: குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கோபத்தைத் தவிர்த்து அமைதியாகப் பேசுவது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காகச் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
துலாம்: மன அமைதியைப் பாதிக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம். திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் பாடங்களைக் கவனமாகப் படிப்பதன் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம்.
விருச்சிகம்: தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். பிறருக்கு உதவுவதன் மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பிரிந்தவர்கள் மீண்டும் உங்களை நாடி வர வாய்ப்புள்ளது.
தனுசு: தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கலாம். லாபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தர்கள் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவார்கள். பயணங்களும் ஏற்படலாம்.
மகரம்: தொழில், வியாபார நடவடிக்கைகள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கலாம். அலுவலகப் பணிகளைச் சிரமமின்றி முடிப்பீர்கள். பயணங்களின்போது திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.
கும்பம்: பணவரவு திருப்தி அளிக்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் சூழல் உருவாகலாம். மாணவர்களுக்குக் கல்விச் செலவுகள் அதிகரிக்கலாம். கல்வியில் முன்னேறுவதற்கான முயற்சிகளைத் தொடர்வீர்கள்.
மீனம்: காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கலாம். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள்.

