லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள 86 ஆம் இலக்கக் கட்டளையை மீறி, நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை வழங்காமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வழக்கு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்குச் அழைப்பாணை பிறப்பித்த நீதிமன்றம், இந்த வழக்கை நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *