கடந்த இரண்டு ஆண்டுகளில் 4056 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவற்றில் 97 – T-56 துப்பாக்கிகளும், ஒரு ஏகே- 47 (AK-47) துப்பாக்கியும் அடங்குகின்றன.
அத்துடன் 143 கைத்துப்பாக்கிகள், 105 ரிவோல்வர்கள் மற்றும் 397 12-போர் (12-bore) துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 4,056 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

