மட்டக்களப்பில் அனர்த்த முன்னாயத்தக் குழுக் கூட்டம்!

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களைத் தடுப்பதற்கும், அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்குமான மாவட்ட மட்ட அனர்த்த முன்னாயத்தக் குழுக் கூட்டம் நேற்று (05) நடைபெற்றது.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, மழைநீர் வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல், நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளைக் கண்காணித்தல், வீதிப் போக்குவரத்துத் தடைகளை அகற்றுதல் மற்றும் அவசரகால நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், முப்படை அதிகாரிகள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைத்து மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *