யானை – மனித மோதலைக் குறைக்க வவுணதீவு கற்பானையில் பனம் விதைகள் நடுகை!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பானை கிராமத்தில், யானை – மனித மோதலைக் குறைக்கும் நோக்கில் 20,000 பனம் விதைகளை நடுகை செய்யும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, நேற்று (05) 10,000 பனம் விதைகள் கற்பானை பகுதியில் நடுகை செய்யப்பட்டன.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலக ஊடகப் பிரிவு அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விதை நடுகையில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 20,000 பனம் விதைகளில் எஞ்சிய 10,000 விதைகளையும் திட்டமிட்ட வகையில் நடுகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலக ஊடகப் பிரிவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேரடியாகக் கள ஆய்விலும் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *