கனடாவில் நடைபெற்ற உலகத் தமிழாய்வு மாநாடு கல்வியாளர்கள் பங்கேற்பு!

அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், ஒக்டோபர் 15 முதல் 18ஆம் திகதி வரை கனடாவின் டொராண்டோ நகரில் உலகத் தமிழாய்வு மாநாடு 2026 நடைபெற்றது.

“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை சார்பில் கிழக்குப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்களும் பங்கேற்றனர்.

குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழக விவசாயத்துறை பீடாதிபதி பேராசிரியர் மு. சுகிர்தரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர்.

தமிழ்மொழி, பண்பாடு, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் சர்வதேச ஆய்வுக் கூட்டிணைவுகளை வலுப்படுத்துவதற்கும் இம்மாநாடு முக்கிய தளமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *