மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (04) பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளனத் தலைவர் பேராசிரியர் ரீ. ஜெயசிங்கம், பொருளாதார நிபுணர் எஸ். சுந்தர் மற்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, சிறுதானியப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துதல், நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், இந்தியாவிலிருந்து உயர்தர விதைகள் மற்றும் விவசாய இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், உள்ளூர் தொழில்முனைவோரின் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவித்தல் மற்றும் இந்திய வர்த்தகர்களுடன் புதிய முதலீட்டுக் கூட்டாண்மைகளை உருவாக்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியத் தொழில் அதிபர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

