கிளிநொச்சி மாவட்டத்தில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக இடம்பெற்று வருகின்றன.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் இன்று (08.11.2026) அதிகாலை முதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான இன்று, விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கான காப்புக் கட்டும் நிகழ்வுகளும் இந்து ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இதன்போது பெருமளவிலான பக்தர்கள் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடுகளில் ஈடுபட்டதுடன், தீபாவளித் திருநாளையும் பக்தி உணர்வுடன் கொண்டாடி வருகின்றனர்.

