மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கும்புறுமூலை மாணிக்கபுரம் கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கான புதிய வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (09.11.2026) நடைபெற்றது.
நீண்டகாலமாகக் கணவனை இழந்த நிலையில், குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பெண்ணின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இவ்வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டினைக் கட்டுவதற்கான நிதி அனுசரணையை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் லயன் த. நிர்மலன் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு, கிராம உத்தியோகத்தர் பாத்திமா நூஸ்றா மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் லயன் த. நிர்மலன் ஆகியோர் கலந்துகொண்டு வீட்டைக் கையளித்தனர்.

