பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பு நிதியுதவி!

பேத்தாழை பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பினால், பேத்தாழை நாவையடி அருள்மிகு பிள்ளையார் ஆலயத்தின் திருப்பணிகளுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத் தலைவரின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பானது, ஆலயங்களின் பராமரிப்பு, சரியைத் தொண்டுகள், எண்ணெய்க்காப்பு, தேர்த்திருப்பணிகள் மற்றும் ஆலய புனரமைப்புப் பணிகளுக்கு தொடர்ச்சியாக நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.

 

அந்தவகையில், இவ்வமைப்பின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, தீபாவளித் தினமான நேற்று (08) பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

 

மேலும், எதிர்காலத்தில் பிரதேசத்திலுள்ள ஏனைய ஆலயங்களின் திருப்பணிகளுக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவிகளை வழங்கும் நோக்கில் இவ்வமைப்பு தனது சமூகப்பணிகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

 

சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்து வரும் இவ்வமைப்பு தொடர்ந்தும் சிறப்பாகச் செயற்பட பாலீஸ்வரப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டுமென ஆலயம் சார்பில் பிரார்த்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *