மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய ரஷ்யர் உயிருடன் மீட்பு!

மிரிஸ்ஸ கடற்கரையில் நீரில் மூழ்கிக்கொண்டிருந்த 57 வயதுடைய ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவரை கடலோரக் காவல்படையின் உயிர்காப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நேற்று (15) காலை சுமார் 9.20 மணியளவில் அனடோலி என அடையாளம் காணப்பட்ட குறித்த சுற்றுலாப் பயணி நீரில் தத்தளித்ததை அவதானித்த உயிர்காப்பாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு அவரை மீட்டுள்ளனர்.

உயிர்காப்பாளர்களின் துரிதமான நடவடிக்கையினால் சுற்றுலாப் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கடற்கரைப் பகுதிகளில் அவசர நிலைமைகளுக்குத் தொடர்ந்து தயாராக இருப்பதாகவும் கடலோரக் காவல்படை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *