சிவாஜிலிங்கம் மறைவுக்கு டக்ளஸ் இரங்கல்!

உடல் நலத்துடன் மீண்டெழுவார் எனத் தாம் கொண்டிருந்த நம்பிக்கையை, எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுச் செய்தி உடைத்துவிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“எண்ணிய இலக்கு ஒன்றாக இருந்தபோதிலும், அதனை அடைவதற்கான பயணத்தின் வழிமுறைகளும் பொறிமுறைகளும் எம்மை இருவேறு பாதைகளில் பயணிக்கச் செய்தன. ஆயினும், அரசியல் களத்தில் நண்பர் சிவாஜிலிங்கத்துடனான உறவு இறுதிவரை நீடித்தது.

அவர் நேசித்த தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவுடன் சகோதர இயக்கம் என்ற வகையில் நானும் உறவில் இருந்தேன். போராட்டக் காலங்களிலும், உள்ளக ஆபத்துகள் ஏற்பட்ட வேளைகளிலும், சக இயக்கம் நெருக்கடிகளைச் சந்தித்தபோது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உறுதுணையாக இருந்துள்ளேன். அந்தக் காலப்பகுதிகளில் நண்பர் சிவாஜிலிங்கமும் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அவர் எண்ணிய இலக்கு ஈடேறட்டும். உடல் நலத்துடன் மீண்டெழுவார் என்ற நம்பிக்கையை அவரது மறைவுச் செய்தி உடைத்துவிட்டது.

அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *