2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

பரீட்சை அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அவற்றை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பரீட்சை நிறைவடைந்த பின்னர் அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *