வடமாகாணத்தில் காற்று மாசு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வடமாகாணத்தில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக் குறியீடு 198 ஆகவும், கிளிநொச்சியில் 175 ஆகவும் அதிகரித்துள்ளதாக வடமாகாண அலுவலகப் பணிப்பாளர் பி. துவாரகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், வெளியில் செல்லும்போது N95 முகக்கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *