புலத்கொஹுபிட்டிய, தெதுகல பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குணமடைந்து வருகின்றது.
வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தை, மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து, வைத்தியசாலையின் கால்நடை மருத்துவக் குழுவினரும் ரந்தெனிகல வனவிலங்கு சுகாதார முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து சிறுத்தைக்கான சத்திரசிகிச்சையை முன்னெடுத்தனர்.
சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து சிறுத்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

