மத்திய மலைநாட்டில் நிலநடுக்க அபாயம் – எச்சரிக்கை!

நாட்டின் மத்திய உயர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் காலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல செனரத்ன எச்சரித்துள்ளார்.

கனமழையினால் நீர்த்தேக்கங்கள் நீரால் நிரம்பும்போது, அவற்றின் கீழுள்ள பாறை அடுக்குகளில் அதிக அழுத்தம் ஏற்படுவதாகவும், இது இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பாறை அடுக்குகளில் பிளவுகள் ஏற்பட்டு, அவற்றில் சிறிய அசைவுகள் உருவாகுவதால் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 5–6 ஆண்டுகளாக மத்திய மலைப்பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகி வருகின்ற நிலையில், நாட்டில் மேலும் நில அதிர்வுமானிகளை நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய மலைப்பகுதிகளில் 13–14 நில அதிர்வுமானிகள் மாத்திரமே நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களே இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், குறிப்பாக இந்தோனேசியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஆழமற்ற கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *