இருவேறு குற்றச்சாட்டில் மூன்று டிப்பர்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று(18) அனுமதிக்கப்படாத வேறு பகுதியில் அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டு, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை பயன்படுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை போன்ற குற்றச்சாட்டுகளுடன் மூன்று டிப்பர் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


