லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 6 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி

லக்னோவ் எக்கானா விளையாட்டரங்கில் நேற்று(19) இரவு மின்னொளியில் நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 61ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 6 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸின் ப்ளே ஓவ் வாய்ப்பு பறிபோனது.

அத்துடன் ப்ளே ஓவ் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் தகுதிபெற்ற நிலையில் இந்தப் போட்டி முடிவுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டன.

ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் நான்காவது அணிக்கான போட்டி மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல் அணிக்கும் இடையில் நிலவுகிறது.

திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *