முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான 3வது மாவட்ட விலை நிர்ணயக்குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று(24) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைப்பட்டியல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் தொழிலாளர் கூலி மற்றும் வாகன வாடகை, கட்டட மூலப்பொருட்கள் தொடர்பான விலை நிர்ணயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலக உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஒப்பந்ததாரர் சம்மேளத்தின் பிரதி நிதிகள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

