கலிபோர்னியாவில் சான் டியாகோ எனும் இடத்தில் இராணுவ குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு வீடு இடிந்து விழுந்ததோடு 10 கட்டிடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிறிய விமானம் செஸ்னா 550 விமானம் என்று பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் விமானி உட்பட எட்டு முதல் 10 பேர் வரை பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

