அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் இன்று (04) அதிகாலை வீட்டினுள் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த 50 வயதுடைய நபர், பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் ஜன்னல் வழியாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

