எருமை மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் நேற்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இதன்போது நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஷ்வரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சம்பவ தினமான வியாழக்கிழமை அன்று (27) உறவினரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது அறுகம்குளம் பகுதியில் கூட்டமாக சென்ற எருமைகளுடன் மோதி விபத்தில் சிக்கினார்.
தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு வருகிறார்.

