விசேட சுற்றிவளைப்பு; போதைப்பொருட்களுடன் 466 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று(18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 466 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 185 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 144 பேரும், கஞ்சா செடிகளுடன் 03 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 167 கிராம் 482 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 291 கிராம் 770 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 62 கிலோ 307 கிராம் 955 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 40878 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *