சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை முதல் காரைதீவு வரையான பிரதான வீதிகளில் மிக நீண்ட காலமாக ஒளிராமல் காணப்பட்டது.
கேட்பாரற்றுக் கிடந்த தெரு விளக்குகள் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களது முயற்சியினால் நேற்று (02) புதன்கிழமை திருத்தி அமைக்கப்பட்டு ஒளிர வைக்கப்பட்டன.
இவ் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

