பிரபல நடிகர் சௌபின் சாஹிர் உட்பட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மஞ்சுமல் போய்ஸ் திரைப்பட தயாரிப்பில் நடந்த நிதி மோசடி தொடர்பில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் இலாபத்திலிருந்து 40 சதவீதத்தைத் தருவதாகக் கூறி, 7 கோடி ரூபாயை பெற்று ஏமாற்றியதாகக் குறித்த மூவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

