மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் ஆக்கத்திறன் கண்காட்சி

மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது பாடசாலையின் நிர்வாக பொறுப்பாளரான சரோஜினி மகேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக அண்மையில் அமைந்துள்ள மட்டக்களப்பு கல்குடா கல்வி நிலையத்துக்கு உட்பட்ட வந்தாறுமூலை கணேச வித்யாலயத்தின் உடைய அதிபர் திரு. சின்னத்துரை மதிவர்ணன் உட்பட மாணவர்களின் பெற்றோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்

வருடம் தோறும் நடைபெறுகின்ற இந்த மாணவர்களின் உடைய ஆக்கத்திறன் கண்காட்சியானது இந்த வருடமும் மாணவர்களுடைய ஆக்க வேலைப்பாடுகளோடு கூடிய பெருமளவான பொருட்களைக் கொண்டு கண்காட்சியாகவே இருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாடசாலை அதிபர் தெரிவிக்கையில் இந்த மாருதிப் பாலர் பாடசாலையில் இருந்து தங்களுடைய பாடசாலைக்கு தரம் ஒன்றிற்காக கல்வி கற்க வருகின்ற மாணவர்கள் மிகவும் திறமையான மாணவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சுமார் 3 மணி நேரங்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியினை பார்வையிட்டதோடு மாணவர்களை வாழ்த்தி இந்த கண்காட்சியினை இவ்வளவு திறமையாக செய்வதற்கு சகல வழிகளிலும் உதவி புரிந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு நன்றியினையும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *