கிளிநொச்சியில் விழிப்புணர்வற்றோருக்கான வெள்ளைப்பிரம்பு வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்
சுகத் வசந்த டி சில்வா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் நாட்டின் கிளீன் சிறீலங்கா திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வசதிகள் மேம்படுத்தல் குறிப்பாக பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெளிவுபடுத்தினார்.
குறித்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், கட்சியின் மூத்த உறுப்பினர் இளையதம்பி கணேச பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட விழிப்புணர்வற்றோருக்கான வெள்ளைப்பிரம்பினையும் வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *