வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று(15) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதேவேளை, வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


