இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

மேஷம்

எதிர்பார்த்த சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

 

ரிஷபம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். துணிச்சலாக செயல்பட வேண்டிய நாள்.

 

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

 

கடகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்து கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

 

சிம்மம்

பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

 

கன்னி

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியைநாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். இனிமையான நாள்.

 

துலாம்

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விஐபிகள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

 

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

 

தனுசு

சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். முக்கியகோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

 

மகரம்

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களிடம் ஒற்றுமை பெருகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

 

கும்பம்

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களிடம் ஒற்றுமை பெருகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

 

மீனம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *