வட மாகாணத்தில் சியாப்பால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் கள விஜயம்

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் உலக வங்கியின் கள விஜயம் நேற்று (07.04.2025) அன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் கமநல சேவைநிலையத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட குளங்களில் ஒன்றான குடிதாங்கி குளமும் அதன் கீழ் காலநிலைக்கு சீரமைவான புதிய விவசாய தொழிநுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பயிற்ச்செய்கைகள் திட்டத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்ட விவசாய கிணறுகள் மற்றும் பருவகால யானை வேலிகளும் கண்காணிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய பயனாளிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் வாய்க்கால் வேலைகளுக்காக முன்மொழியப்பட்ட கருவேலன்கண்டல் குளத்தின் ஆரம்ப வேலைகளும் தொடக்கி வைக்கப்பட்டன.

இதில் Dr. Sheu Salau தலைமையிலான உலக வங்கியின் குழு, பிரதேச செயலாளர் , ஒட்டுசுட்டான் திரு. நிசாந்தன், சியாப்பின் திட்ட பணிப்பாளர் S.M.Saman Bandula sena மற்றும் வட மாகாணம் A.G.C Babu பிரதி திட்ட பணிப்பாளர் என்போருடன் இணைந்து இதனுடன் தொடர்புடைய திணைக்கள அலுவலர்கள், பாட விதான நிபுணர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *