மேஷ ராசி அன்பர்களே! எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும் நாள். அரசியல்வாதியின் நட்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வேலை இடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் தீரும்.
ரிஷப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியம் நடக்கும் நாள். வேலை இடத்தில் உங்களின் திறமை பாராட்டப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய பாதை அமையும். வருமானம் பெருகி மன தைரியம் உண்டாகும். வியாபாரம் மேன்மையாக நடக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுன ராசி அன்பர்களே! நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும் நாள். தொழிலில் கவனமாக இருந்தாலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். வரவுக்கு மேல் செலவு வரலாம். வேலை இடத்தில் சக ஊழியர்களின் தொந்தரவு இருக்கும். மேலதிகாரிகளின் கோபம் மனதை வருத்தும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும்.
கடக ராசி அன்பர்களே! மேன்மையான செய்திகள் வரும் நாள். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை உயர்வு பணி மாறுதல் கிடைக்கலாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். வெளியூர் பயணங்களுக்கு ஏற்பாடுகள் நடக்கும். கண் திருஷ்டி பாதிப்பு விலகும். குல தெய்வத்தின் உடைய அருள் சித்திக்கும்.
சிம்மராசி அன்பர்களே! மிதமான நன்மைகள் நடக்கும் நாள் இன்று. உங்களின் வளர்ச்சி பிடிக்காதவர்களின் பொறாமை பாதிப்பை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வேலை இடத்தில் உங்களின் திறமைகள் ஓரங்கட்டப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்காமல் போக கூடும். மனைவி ஏறுக்கு மாறாக நடக்கலாம். நன்மை செய்தவர்களே உங்களுக்கு எதிராக பேசக்கூடும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
கன்னி ராசி அன்பர்களே! சிறப்பான செய்திகள் கிடைக்கும் நாள். தொழிலில் மேன்மையான நிலை ஏற்படும். லாபம் பெருகும் கையிருப்பு உயரும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை இடத்தில் மரியாதையும் மதிப்பும் கூடும். வெளியூர் பயணங்களில் நன்மை உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோர்களின் ஆசை நிறைவேற்றப்படும். கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும்.
துலாம் ராசி அன்பர்களே! வெற்றிகரமாக காரியங்கள் நடக்கும் நாள். மன உறுதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பங்குப் பரிவர்த்தனையில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே! தொழில்துறையில் சில சிரமங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். எதிர்பாராத செலவுகள் வந்து சிரமப்படுத்தலாம். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் மன அமைதியை கெடுக்கும். அரசு அலுவலகங்களில் கவனமாக வேலை பார்க்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக கூடாது. குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும்.
தனுசு ராசி அன்பர்களே! அருமையான வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொழில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். சிறப்பான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை ஏற்படும். கையிருப்பு கூடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
மகர ராசி அன்பர்களே! மங்கல காரியங்கள் நடக்கும் நாள். அரசு வேலையில் அனுகூலம் நடக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். பெற்றோர்களின் குறைகள் தீர்க்கப்படும். தேக ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
கும்ப ராசி அன்பர்களே! விருப்பப்பட்ட காரியங்கள் நடக்கும் நாள். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தொழில் மிகச் சிறப்பாக நடக்கும். வியாபாரம் பெருகி கையிருப்பு அதிகரிக்கும் வேலை இடத்தில் மரியாதை கூடும். எதிர்பார்த்த சம்பள உயர்வு ஏற்படும். பணி மாறுதலும் கிடைக்கலாம். நகைகள் வாங்க வேண்டும் என்ற மனைவியின் ஆசை நிறைவேறும். பிள்ளைகளின் மீது அக்கறையும் கவனமும் அதிகரிக்கும் குலதெய்வத்தினுடைய அருள் கிடைக்கும்.
மீன ராசி அன்பர்களே! எதிர்பாராத நன்மைகள் நடக்கும் நாள். நீங்கள் திட்டம் போட்ட செயல் வெற்றிகரமாக நடக்கும். வியாபாரத்தில் செய்த நுட்பங்கள் பலன் கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சு செல்வாக்கை கொண்டு வரும். அரசியல் வட்டாரத்தில் பழக்கம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யப்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பதவி உயர்வு கிடைக்கலாம் விருப்பப்பட்ட வேலை மாறுதல் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

