ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொதுச் சுகாதாரப் பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரிகளான வைத்தியர் பகீரதன், வைத்தியர் சஞ்சீவன் ஆகியோரின் வழிகாட்டலில் மாங்குளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நதிருசன் தலைமையில் உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


